×

மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்.8ம் தேதி அமைச்சரவை கூட்டம்

 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 8ம் தேதி அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில் அக்.8ம் தேதி, காலை 11 மணியளவில் அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய அமைச்சர்கள் பொறுப்பேற்றுள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் கூடுகிறது. புதிய அமைச்சர்கள் பொறுப்பேற்ற பிறகு நடக்க உள்ள முதல் அமைச்சரவைக் கூட்டம் என்பதால் முக்கிய ஆலோசனை மற்றும் முடிவுகள் குறித்து விவாதிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ள நிலையில் அமைச்சரவை கூடுகிறது.