×

இந்திரா காந்தியின் 107வது பிறந்த நாள் - தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் மரியாதை!

 

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 107வது பிறந்த நாளையொட்டி அவரது திருவுருவ படத்திற்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. 

இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் முன்னாள் பிரதமர் பாரத ரத்னா அன்னை இந்திரா காந்தி அவர்களின் 107-வது பிறந்த நாளான இன்று நாகர்கோவிலில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கும் திருவுருவப்படத்திற்கும் தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கு.செல்வபெருந்தகை MLA அவர்கள் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது தொடர்ந்து தேசிய ஒருமைப்பாட்டு தின உறுதிமொழி ஏற்கப்பட்டது.