"புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்காது" - அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திட்டவட்டம்
புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்காது என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
புதிய கல்விக் கொள்கையை ஏன் எதிர்க்கிறீர்கள் என மத்திய அரசு எங்களிடம் கேட்டுள்ளது. கல்வி மாநில பட்டியலுக்கு வரவேண்டும் என்பதுதான் தமிழ்நாடு அரசின் நோக்கம். கல்வி மாணவ செல்வங்களுக்கானது . அதில் அரசியல் செய்யக்கூடாது. அதனால் தான் புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு எதிர்கிறது. இதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. புதிய கல்விக் கொள்கை என்பது தமிழ்நாடு அரசு என்றைக்குமே ஏற்றுக்கொள்ளாத ஒன்று என்று தெரிவித்துள்ளார்.