×

பள்ளிகளுக்கு விநாயகர் சதுர்த்தி உறுதிமொழி சுற்றறிக்கை அனுப்பப்பட்டதால் சர்ச்சை

 

விநாயகர் சதுர்த்தி விழாவை சூழல் மாசு ஏற்படுத்தாத வகையில் கொண்டாடுவோம் என உறுதிமொழி எடுக்க வலியுறுத்தி பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது.

அறிவு ,ஞானம், கல்வி ஆகியவற்றை கடவுளாகவும் எந்த விஷயத்தை முதலில் எடுத்தாலும், விநாயகரை வணங்கி தான் செய்ய வேண்டும்  என்ற ஐதீகமும் இன்று வரை தொடர்ந்து இருந்து வருகிறது. அந்தவகையில் முழு முதல் கடவுளான விநாயகனை அவரது பிறந்த நாளான சதுர்த்தி அன்று சிலை வைத்து வழிபட்டு, அதனை  ஊர்வலமாக கொண்டு சென்று நதிகளில் கரைப்பது வழக்கம். இந்தாண்டு விநாயகர் சதுர்த்தி திருவிழா நாடு முழுவதும் வரும் சனிக்கிழமை கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. 

இந்நிலையில் 
விநாயகர் சதுர்த்தி விழாவை சூழல் மாசு ஏற்படுத்தாத வகையில் கொண்டாடுவோம் என உறுதிமொழி எடுக்க வலியுறுத்தி புதுக்கோட்டை, பெரம்பலுர் மாவட்ட பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள பள்ளி கல்வித் துறை, "சம்பந்தப்பட்ட ஆட்சியர்களிடம் இதுகுறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அறிக்கையின் அடிப்படையில் ஆட்சியர்களின் அறிவுறுத்தல் அடிப்படையில் இந்த சுற்றறிக்கை
அனுப்பப்பட்டுள்ளது" என தெரிவித்திருக்கிறது.