×

2ஆவது நாளாக குறைந்த தங்கம் விலை - விலை நிலவரம் இதோ!!

 

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை  ஆறுதலளிக்கும் வகையில் சற்று குறைந்துள்ளது. 

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை மே மாத தொடக்கம் முதல்  ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. நேற்றுமுன்தினம்  ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53,120-க்கும், 1 கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.6,640-க்கும் விற்பனையானது. நேற்றைய நிலவரத்தின் படி , தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.53,040க்கும்,  கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.6,630 விற்பனையானது. 


 

இந்நிலையில் சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.52,920-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.6,615-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.