×

அதிரடியாக குறைந்தது தங்கம் விலை - இன்றைய  நிலவரம் இதோ!!

 

ஜூன் மாதம் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. நேற்று சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்தது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.80 உயர்ந்து  ஒரு கிராம் ரூ.6,780க்கு விற்பனையானது.


 

இந்நிலையில் சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.85 குறைந்துள்ளது. இதன் மூலம் ஒரு கிராம் தங்கம் விலை ரூ.6,695-க்கு விற்பனையாகிறது. அத்துடன் சவரனுக்கு ரூ.680 குறைந்து ஒரு சவரன் ரூ.53,560-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து ஒரு கிராம் ரூ.96.50க்கும்,  ஒரு கிலோ வெள்ளி ரூ.96,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.