×

ஜெட் வேகத்தில் தங்கம் விலை - சவரனுக்கு ரூ. 480 உயர்ந்தது!!

 

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 480 உயர்ந்தது.

ஜூலை மாதம் தொடங்கியது முதல் தங்கம் விலையில் பெரிய அளவில் மாற்றம் ஏதுமில்லை. நேற்று தங்கம் விலையில்  எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.6,760க்கும், ஒரு சவரன் 54, 080 ரூபாய்க்கும் விற்பனையானது. 

இந்நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,820க்கு விற்பனையாகிறது.  ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.54,560க்கு விற்பனையாகிறது.