×

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை... அதிர்ச்சியில் நகைபிரியர்கள் 
 

 

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை மே மாத தொடக்கம் முதல்  ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது.

நேற்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 6,610 ரூபாய்க்கும்,  ஒரு சவரன் 80 ரூபாய் உயர்ந்து ரூபாய் 52 ஆயிரத்து 880 ரூபாய்க்கும் விற்பனையானது.


இந்நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53,120-க்கும், 1 கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.6,640-க்கும் விற்பனையாகிறது.  வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து, ரூபாய் 88.50 காசுகளுக்கும் ஒரு கிலோ வெள்ளியின் விலை ஆயிரம் ரூபாய் உயர்ந்து 88 ஆயிரத்து 500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது