×

அதிரடியாக குறைந்த தங்கம் விலை - நிலவரம் இதோ!!

 

சென்னையில்  நேற்று முன்தினம் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து, ஒரு சவரன் தங்கத்தின் விலை  ரூ.54,400 ஆக விற்பனையானது. நேற்று  ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹240 குறைந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ₹54,160க்கு விற்பனை செய்யப்பட்டது.


இந்நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ₹80 குறைந்துள்ளது. இதன் மூலம் ஒரு சவரன் தங்கத்தின் விலை  ₹54,080க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ. 10 குறைந்து ஒரு கிராம் ₹6,760க்கும் விற்பனை செய்யப்படுகிறது.