×

இன்று நிறைவு பெறுகிறது கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள்

 

அடிப்படை விளையாட்டுகளையும், மாணவர்களின் விளையாட்டு ஆர்வத்தையும் ஊக்குவிக்க 'கேலோ இந்தியா' (விளையாடு இந்தியா) விளையாட்டு போட்டிகளை கடந்த 2017-ல் பிரதமர் நரேந்திர மோடி துவக்கினார்.   2023-ம் ஆண்டுக்கான 6-வது 'கேலோ இந்தியா' போட்டிகளை, ஜனவரி 19-ம் தேதி சென்னையில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இன்று வரை நடக்கும் இப்போட்டிகளில், 5,600 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். சென்னை மட்டுமல்லாது கோவை, மதுரை, திருச்சி ஆகிய நகரங்களிலும் இப்போ போட்டிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் சென்னை, கோவை, திருச்சி மற்றும் மதுரை ஆகிய நகரங்களில் நடைபெற்று வந்த 6வது கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் இன்று நிறைவு பெறுகிறது. இறுதிநாளான இன்று கால்பந்து, நீச்சல், டென்னிஸ், டேபிள் டென்னிஸ் ஆகிய 4 போட்டிகள் நடைபெறுகிறது.


சென்னை கலைவாணர் அரங்கில் மாலை 6 மணிக்கு நடைபெறும்  நிறைவு விழாவில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்குகிறார்கள்