×

25 சுங்கச்சாவடிகளில் அமலுக்கு வந்தது சுங்கக்கட்டண உயர்வு.. 

 

தமிழ்நாட்டில் 25 சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டண உயர்வு இன்று (செப்டம்பர் 1) முதல் அமலுக்கு வருகிறது. 

 நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில்   816 சுங்கச்சாவடிகல் அமைந்துள்ளன. இங்கு 4 சக்கர வாகனம், பேருந்து, லாரிகள், கனரக வாகனம் என வாகனங்களின் வகைகளுக்கு ஏற்ப ரூ.85 முதல் ரூ.470 வரை சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதில் அவ்வப்போது வெவ்வேறு சுங்கச்சாவடிகளில்  ஆண்டுக்கு இருமுறை, ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களில் கட்டணம்  உயர்த்தப்படுகிறது. அந்தவகையில் தமிழகத்தில்  மொத்தம் 67 சுங்கச்சாவடிகள் அமைந்துள்ளன.  


 
இவற்றில் 36 சுங்கச்சாவடிகளில் கடந்த ஜூன் மாதம் 5 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்பட்டு புதிய சுங்கக்கட்டணம் அமலுக்கு வந்தது.  இந்த நிலையில் ஏனைய 25 சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டம் உயர்த்தப்படுவதாக அண்மையில் அறிவிக்கப்பட்டது. இந்த சுங்கக்கட்டண உயர்வு இன்று (செப்டம்பர் 1) முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி 5 முதல் 7 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தடுவதாகவும், இதன் மூலம் ஏற்கனவே இருக்கும் கட்டணத்தை விட வாகன ஓட்டிகள் ரூ. 5 முதல் ரூ.150 வரை கூடுதலாக செலுத்த வேண்டியிருக்கும் என கூறப்படுகிறது.