×

கோயம்பேட்டில் இரு மடங்காக உயர்ந்த தக்காளி விலை.. 

 


சென்னை கோயம்பேடு மொத்த காய்கறி சந்தையில் தக்காளி விலை 2 மடங்காக உயர்ந்துள்ளது இல்லத்தரச்சிகளை கலக்கமடையச் செய்துள்ளது.  

வரத்து குறைவு காரணமாக சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை இருமடங்காக உயர்ந்திருக்கிறது.  மொத்த விற்பனையில் கடந்த வாரம் 1 கிலோ தக்காளி ரூ.35க்கு விற்பனையான நிலையில் இன்று ரூ.70 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் கடந்த வாரம் சில்லறை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ. 50 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்றைய தினம் ரூ.80 வரையும், மற்ற இடங்களில் ரூ. 90வரையிலும் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  

வரத்து குறைவு காரணமாக தக்காளி விலை ஏற்றம் கண்டிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.  இந்நிலையில் சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் இன்றை விலை நிலவரம் படி, தக்காளி - ₹70,வெங்காயம் - ₹60, கத்தரிக்காய் - ₹30, பீட்ரூட் -₹20, அவரைக்காய் - ₹60, கேரட் - ₹35, சவ்சவ்- ₹20, பச்சை மிளகாய் - ₹25, சேனை கிழங்கு ₹55, ₹60, இஞ்சி முத்தல் - ₹140, குடைமிளகாய்- ₹ 40, உருளைக்கிழங்கு - ₹30, ₹35,சின்ன வெங்காயம் - ₹50, ₹60, பீன்ஸ்-₹110க்கும் விற்பனை செய்யப்படுகிறது.