×

நாளை தான் கடைசி நாள்..! உடனே செய்து முடிங்க...தவறினால் 5000 அபராதம் கட்ட நேரிடும்..! 

 

வருமான வரிக் கணக்கை செலுத்துவதற்காக ஜூலை 31 கடைசி நாளாகும். வரி செலுத்துவோர் இறுதித் தருணம் வரை தாமதிக்கக் கூடாது. ITR ஐ முன்கூட்டியே தாக்கல் செய்வது நல்லது ஆகும்.கடந்த மார்ச் மாதத்தோடு ஆண்டு இறுதிக் கணக்கு முடிவடைந்த நிலையில் 2023-2024 ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய வருமான வரித்துறை உத்தரவிட்டிருந்தது. அதன்படி ஒவ்வொரு வருடமும் ஜூலை 31ம் தேதி காலக்கெடுவை நிர்ணயிப்பது வழக்கம்.

ஜூலை 31க்குள் வருமான வரியை தாக்கல் செய்யத் தவறினால் என்ன நடக்கும்?

வருமான வரி கணக்கு (ITR) தாக்கல் செய்வதற்காக நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் சமர்பிக்க தவறியவர்கள் அபராத்துடன் கூடிய  ஒரு வாய்ப்பு வழங்கப்படும். அதன்படி 31 டிசம்பர் 2024க்கு தாக்கல் செய்யலாம்.
அதனையும் கடந்து வருமான வரியை தாக்கல் செய்யவில்லை எனில் அது தானாகவே புதிய வரி விதிப்பு முறைக்கு மாற்றப்படும்.
ஜூலை 31 ஆம் தேதிக்குள் வருமான வரியைத்  தாக்கல் செய்யத் தவறினால் வருமான வரிச் சட்டம் 234F பிரிவின்படி, தாமதமாகத் தாக்கல் செய்வதற்கான கட்டணம் ₹5000  விதிக்கப்படும்.
இதேபோல உங்கள் வருமானம் ₹ 5 லட்சத்திற்கு மிகாமல் இருந்தால் , வருமான வரியை தாமதமாக தாக்கல் செய்வதற்கான கட்டணம் ₹ 1,000 ஆகும்.
மேலும் கூடுதலாக, நிலுவையில் உள்ள வரித் தொகைக்கு மாதத்திற்கு 1% வட்டி விதிக்கப்படும்.