×

தீபாவளி- நாளை கல்வி நிறுவனங்களுக்கு அரைநாள் விடுமுறை

 

தீபாவளி பண்டிகையை ஒட்டி கல்வி நிலையங்களுக்கு நாளை அரைநாள் விடுமுறை அறிவித்தது தமிழ்நாடு அரசு.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் நாளை (30.10.2024) முற்பகல் மட்டும் செயல்படும். பிற்பகல் அரை நாள் விடுமுறை அறிவித்து, தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது