×

சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே அனைத்து ரயில்களும் ரத்து

 

தாம்பரத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்றுவருவதை தொடர்ந்து  சென்னை புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதற்கு பதிலாக சென்னை கடற்கரை - பல்லாவரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாகவும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூர் மற்றும் அரக்கோணம் ரயில்கள் வழக்கம் போல இயங்கும் என்றும் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. குறிப்பாக கடற்கரை- பல்லாவரம் இடையே 20 முதல் 30 நிமிட இடைவெளியில் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டுவருகின்றன. இன்று மாலை 5 மணிக்கு மேல் வழக்கம்போல் ரயில்கள் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை தாம்பரம்- கடற்கரை இடையே நாள் முழுவதும் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 50 கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் வரும் ரயில்கள் பல்லாவர்த்திலேயே மீண்டும் சென்னை கடற்கரைக்கு திரும்பி செல்கிறது, அதுபோல் செங்கல்பட்டுவில் இருந்துவரும் மின்சார ரயில்கள் கூடுவாஞ்சேரியிலேயே திரும்பு செல்கிறது, ஆனால் சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு, திருமால்பூர் செல்லும் மின்சார ரயில்கள் தாம்பரம் விரைவு ரயில் நடைமேடை 5-6 ல் நின்று விட்டு செங்கல்பட்டு திருமால்பூர் செல்கிறது. மறுமார்கத்திலும் திருமால்பூர், செங்கல்பட்டுவில் இருந்து சென்னை கடற்கரைக்கு செல்லும் ரயில்கள் தாம்பரம் ரயில் நிலையத்தில் 5-6 நடைமேடைகளில் நின்று சென்னை கடற்கரைக்கு செல்கிறது.