ஏற்றுமதி வழிமுறைகளும், சட்டதிட்டங்களும் குறித்த பயிற்சி - தமிழக அரசு அறிவிப்பு
தமிழக அரசு சார்பில் ஏற்றுமதி வழிமுறைகளும், சட்டதிட்டங்களும் குறித்த பயிற்சி வருகிற 31ம் தேதி முதல் பிப்ரவரி 02ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன வளாகத்தில், ஏற்றுமதி இறக்குமதி வழிமுறைகளையும், சட்டதிட்டங்களையும் குறித்த பயிற்சி வரும் 31.01.2024 முதல் 02.02.2024 தேதி வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது.இப்பயிற்சியில் ஏற்றுமதி சந்தையின் தேவை. கொள்முதலுக்ககான வாய்ப்புக்கள், ஏற்றுமதி இறக்குமதி சம்பந்தப்பட்ட சட்டதிட்டங்கள், வங்கி நடைமுறைகள், அந்நிய செலாவனியின் மாற்று விகிதங்கள். காப்பீடு குறித்த தகவல்கள். ஏற்றுமதி-இறக்குமதி விதிமுறைகள் மற்றும் ஆவணங்கள், போன்றவை பயிற்றுவிக்கப்படும். மேலும், இப்பயிற்சியில் ஏற்றுமதியாளர்களுக்கான ஊக்க உதவிகள் பற்றியும் அவைகளை பெறும் முறைகளை பற்றியும் ஆலோசனைகளும், அரசு வழங்கும் உதவிகள் மற்றும் மானியங்கள் ஆகியவையும் விவாதிக்கப்படும்.