×

“சில்லறையாக தர வேண்டும் என நிர்பந்திக்கக் கூடாது” நடத்துநர்களுக்கு அறிவுரை

 

மாநகர பேருந்துகளில் பயணிகள் ஏறும்போதே பயணாச்சீட்டுக்கு சில்லறையாக தர வேண்டும் என நிர்பந்திக்கக்கூடாது என நடத்துநர்களுக்கு போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தியுள்ளது.

மாநகர பேருந்துகளில் நடத்துநர்கள் மீது வந்த புகாரை தொடர்ந்து போக்குவரத்துத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “மாநகரப் போக்குவரத்து கழக பேருந்துகளில் பயணிகள் ஏறும்போதே பயணச்சீட்டு வாங்க சில்லறையாக கொடுக்க வேண்டும் என நிர்பந்தம் செய்யக்கூடாது. பயணிகள் கொடுக்கும் பணம் மற்றும் நாணயங்களை பெற்று உரிய மீதித் தொகையை வழங்க வேண்டும். 

பணிமனைகளில் பணியின்போது நடத்துனர்களுக்கு வழங்கப்படும் முன்பணம் பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்கும்போது முறையாக பயன்படுத்திட வேண்டும். பயணிகளிடத்தில் சில்லறை தொடர்பான விவாதங்களை தவிர்த்து கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும். சில்லறை பெறுவதில் வாக்குவாதம் தொடர்பான புகார்கள் பெறப்பட்டால் சம்பந்தப்பட்ட நடத்துனர் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் குறிப்பிட்டுள்ளது.