×


#Breaking திருச்சி மக்களவை தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கீடு

 

திமுக கூட்டணியில் மதிமுக திருச்சி தொகுதியில் போட்டியிடுகிறது. அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் முன்னிலையில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,  இந்திய கம்யூனிஸ்ட் , மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு நிறைவடைந்துவிட்டது. நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுகவிற்கு ஒரு மக்களவைத் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்நிலையில்  மக்களவைத் தேர்தலில் திருச்சிராப்பள்ளி தொகுதியில் போட்டியிடுகிறது மதிமுக. இதுதொடர்பாக வெளியான செய்திக்குறிப்பில்,  நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத் பொதுத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகமும் - மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகமும் மற்றத் தோழமைக் கட்சிகளும் இணைந்து போட்டியிடுவது தொடர்பாக 8.3.2024 அன்று செய்து கொண்ட தொகுதி ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாக, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் பின்வரும் தொகுதியில் போட்டியிடுவதென இன்று (18.3.2024) தீர்மானிக்கப்பட்டது.

தொகுதி விவரம்

1. திருச்சிராப்பள்ளி