×

வருகிற 6ஆம் தேதி உள்ளூர் விடுமுறை - எந்த மாவட்டத்திற்கு தெரியுமா?

 

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையான திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை தேர் திருவிழா மிகவும் பிரசித்தியாக நடைபெறும்.  பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்ளும் நிகழ்வாக சித்திரை தேரோட்ட விழா நடைபெறும். 

இந்நிலையில்  திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு மே 6ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.  விடுமுறைக்கு பதிலாக ஜூன் 29ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.