பெண்ணுக்கு நீதி கிடைக்க உதவுவோம் என்ற நல்ல நோக்கத்தில்தான் ஆடியோக்களை பகிர்ந்தேன்- திருச்சி சூர்யா
பெண்ணுக்கு நீதி கிடைக்க உதவுவோம் என்ற நல்ல நோக்கத்தில்தான் அந்த ஆடியோக்கள் பகிரப்பட்டன. நீங்கள் தற்போது செய்யும் செயலால் உண்மையாக பாதிக்கப்பட்ட,பாதிக்கப்படவிருக்கும் பெண்களுக்கு உதவுவதற்கு யாரும் வர மாட்டார்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் என மோனிஷ் ராய்க்கு திருச்சி சூர்யா பதிலளித்துள்ளார்.
சென்னையை சேர்ந்தவர் மோனிஷ் ராய் (24) இவர் கடந்த ஐந்து வருடங்களாக நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளராக இருக்கக்கூடிய இடும்பாவனம் கார்த்திக் என்பவரை காதலித்து வருகிறார். இந்நிலையில் மோனிஷா ராய் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆன்லைன் மூலமாக புகார் ஒன்றை அளித்துள்ளார். புகாரில் திருச்சி சிவா அவர்களின் மகன் சூர்யா என்கிற மணிவண்ணன் அவருடைய X தளத்தில் இளம் பெண்ணை கர்ப்பமாக்க ஏமாற்றிய இடும்பாவனம் கார்த்திக் என்னும் தலைப்பிட்டு இரண்டு நிமிடங்கள் 56 வினாடிகள் ஓடக்கூடிய குரல் பதிவில் பல மாதங்களுக்கு முன்பு நானும் இடும்பாவனம் கார்த்திக் அவர்களும் பேசிய அலைபேசி உரையாடல்களை வெளியிட்டுள்ளார். லட்சக்கணக்கான நபர்கள் இந்த வீடியோவை பார்த்தும் மறுபதிவிட்டு வருகின்றனர். திருச்சி சூர்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில் திருச்சி சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், “தங்கை மோனிஷ் ராய் அவர்களுக்கு, தங்களது வீடியோவை பார்த்தேன். நீங்கள் தனிப்பட்ட முறையிலோ, கட்சியிடமோ சமரசம் பேசி பிரிந்துவிட்டீர்கள் என்றால்,உங்கள் சொந்த விவகாரங்களில் தலையிட்டு கிசுகிசு பேச வேண்டும் என்றோ அல்லது அதை வைத்துத்தான் நான் அரசியல் செய்ய வேண்டும் என்ற தேவை எனக்கு கிடையாது. நீங்கள் உங்கள் முகநூலில் நான் பாதிக்கப்பட்டு விட்டேன் என்னை இவர்கள் பயன்படுத்தி ஏமாற்றிவிட்டார்கள் என்று நீங்கள் பகிர்ந்த புகைப்படங்களை வைத்து மட்டுமே அந்த பெண்ணுக்கு நீதி கிடைக்க உதவுவோம் என்ற நல்ல நோக்கத்தில்தான் அந்த ஆடியோக்கள் பகிரப்பட்டன.
நீங்கள் தற்போது செய்யும் செயலால் உண்மையாக பாதிக்கப்பட்ட,பாதிக்கப்படவிருக்கும் பெண்களுக்கு உதவுவதற்கு யாரும் வர மாட்டார்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த ஆடியோக்கள் யாருடைய மொபைலில் சேமித்து வைக்கப்பட்டிருந்தன? என்பது ஊர் அறிந்ததே. உங்கள் தனிப்பட்ட ரகசிய விஷயங்களை சாட்டை துரைமுருகன் தொலைபேசியில் வைத்திருந்ததற்கு காரணம் என்ன? மாற்று அரசியல் என்று கூறிவிட்டு ரவுடிகளிடம் கூட தேர்தலுக்கு பணம் வசூலிப்பது, சாதிவெறியோடு வாக்குகளுக்கு திட்டமிடுவது, சக கட்சிகாரர்களை சீமான் கேவலமாக பேசியது என பல்வேறு ஆடியோ பதிவுகளில் ஒரு பதிவாகத்தான் நீங்கள் சொல்கிற ஆடியோவும் வெளிவந்திருக்கிறது. நியாயமாக பார்த்தால், அந்த ஆடியோக்கள் லீக்காக காரணமாக இருந்த சாட்டை துரைமுருகன் சாட்டை துரைமுருகன் மீதுதான் நீங்கள் புகார் கொடுத்திருக்க வேண்டும்.
மற்றபடி, நீங்கள் கொடுத்த புகாரை சட்டரீதியாக எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன். நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.