×

விபத்தில் தூக்கிவீசப்பட்ட பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன்- பரபரப்பு வீடியோ

 

பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் பைக்கில் சென்றபோது காஞ்சிபுரம் அருகே நிகழ்ந்த விபத்தில் படுகாயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பைக் வீலிங் செய்து கொண்டிருந்தபோது டிடிஎஃப் வாசன் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்டார். இதில் அவருக்கு கை உடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பைக் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பில் மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. காஞ்சிபுரம் பாலுசெட்டி சத்திரம் அருகே சாகசம் செய்ய முயன்றபோது சாலையோர பள்ளத்தில் டிடிஃஎப் வாசன் விழுந்தார்.

விபத்தில் படுகாயமடைந்த டிடிஎஃப் வாசன் காஞ்சிபுரம் மீனாட்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. சுஸுகி ஹயபுசா வகை பைக்கில் பயணம் செய்த நிலையில், இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. காவல்துறை பல முறை எச்சரித்தும் விதிகளை மீறி வீலிங் செய்ததால் விபத்து நேர்ந்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர். மேலும் விபத்துக்குள்ளான வாகனத்தை கைப்பற்றிய போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.