×

நானும் ஓபிஎஸ்ஸும் இணைந்து செயல்படுவோம்- டிடிவி தினகரன்

 

புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆரின் 107வது பிறந்தநாளை முன்னிட்டு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், கடலூர் மாவட்டம், மஞ்சக்குப்பம், மணிகுண்டு அருகே அமைந்துள்ள எம்ஜிஆரின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “ஓ.பன்னீர்செல்வமும், நானும் வருங்கால அரசியலில் இணைந்து செயல்பட வேண்டும் என ஒரு முடிவை எடுத்துள்ளோம். கூட்டணி பற்றி உரிய நேரத்தில் முடிவை அறிவிப்போம். கூட்டணி வைத்து தேர்தலை சந்திப்பதில் எந்த தவறும் இல்லை. ஆனால் தமிழ்நாடு மக்கள் நலனுக்கு எதிராக செயல்படும் எந்த ஒரு கட்சியுடனும் கூட்டணி வைக்க மாட்டோம். 

தமிழ்நாட்டு மக்கள் விரும்பாத திட்டங்களை இங்கே திணிப்பதில்லை என்ற நிலைபாட்டை மத்திய பாஜக அரசு எடுத்துள்ளதாக தெரிகிறது. அதனால் நாங்கள் பாஜகவை கடுமையாக விமர்சிப்பத் குறைத்துள்ளோம். திருவள்ளுவருக்கு காவி ஆடை விவகாரத்தில் ஆளுநர் அவரது பதவிக்கு இழுக்கு ஏற்படுத்தும் விதமாக உள்ளது. ஆளுநர் ரவியை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்பதே தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கை. விவசாயிகளை,  தமிழ்நாட்டு மக்களை பாதிக்கும் திட்டங்களையும்,  ஸ்டெர்லைட் , மீத்தேன் ஹைட்ரோ கார்பன் என போன்றவற்றை முன்பு தமிழ்நாட்டில் திணித்த பாஜக அரசு தற்போது திணிப்பதில்லை. வெள்ள நிவாரணத்துக்கு உரிய நிதியை மத்திய அரசு தர வேண்டும்” என்றார்.