×

திமுக, அதிமுகவை முடிவுக்கு கொண்டு வரும் இயக்கம் அமமுக- டிடிவி தினகரன்

 

ஆளும் கட்சியாக இருந்தாலும் சரி ஆண்ட கட்சியாக இருந்தாலும் சரி தோல்விக்கு பிறகு படுத்து விடுகிறார்கள். ஆனால் தோல்விக்கு பிறகும் எழுந்து நிற்கக்கூடிய கட்சி அமமுக என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

புதுக்கோட்டை பால்பண்ணை அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அமமுக சார்பில் நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்புரையாற்றிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், “வரக்கூடிய 75 நாட்கள் இரவு பகல் பாராமல் சொந்த பணிகளை தள்ளிவைத்துவிட்டு நாடாளுமன்ற தேர்தல் பணியை சிறப்பாக ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். ஆர்கே நகர் இடைத்தேர்தலில் உழைத்து எவ்வாறு வெற்றி பெற வைத்தீர்களோ? அதேபோல் இந்த தேர்தலிலும் வெற்றி வாய்ப்பை பெற பாடுபடவேண்டும். இந்தியாவின் பிரதமரை தீர்மானிக்க கூடிய வகையில் அமமுக இந்த நாடாளுமன்ற தேர்தலில் திகழும். அமமுக முக்கிய கட்சியாக உள்ளது.

ஆளும் கட்சியாக இருந்தாலும் சரி ஆண்ட கட்சியாக இருந்தாலும் சரி தோல்விக்கு பிறகு படுத்து விடுகிறார்கள். ஆனால் தோல்விக்கு பிறகும் எழுந்து நிற்கக்கூடிய கட்சி அமமுக. இது குதிரையை போன்ற இயக்கம். யானை படுத்துவிட்டால் எல்ல முடியாது யானை போன்றவர்கள் தான் துரோக கும்பல். பண பலத்தை வைத்துக்கொண்டு பதவி வெறி பிடித்தவர்கள் துரோகத்தை மட்டுமே மூலதனமாக கொண்ட கும்பலுக்கு பாராளுமன்ற தேர்தலில் தக்க பாடம் புகற்ற வேண்டும். முதலமைச்சராக்கியவருக்கும் துரோகம் ஆட்சியை தக்கவைக்க பாடுபட்டவர்களுக்கும் துரோகம் என அனைவருக்கும் துரோகம்.

எம்ஜிஆர், ஜெயலலிதா இயக்கத்தை கபளீகரம் செய்துள்ளது துரோக கும்பல். இதனை மக்கள் உணர்ந்துள்ளார்கள். இரட்டை இலை சின்னம் இருக்கிறது என்று அவர்களோடு இருக்கும் தொண்டர்களும் விழித்து கொள்ளும் காலம் விரைவில் உள்ளது‌. திமுக, அதிமுகவை முடிவுக்கு கொண்டு வரும் இயக்கம் தான் அமமுக. அதற்கு அச்சாரமாக நாடாளுமன்ற தேர்தலில் பணியாற்ற வேண்டும். அதிமுக திமுகவிற்கு மாற்று சக்தியாக அமமுக உள்ளது‌. ஏழை, பணக்காரர்கள் என அனைவரது வீட்டிலும் குக்கர் உள்ளது. அதனால் குக்கர் சின்னத்தை ஒவ்வொரு இல்லத்திற்கும் அமமுக தொண்டர்கள் கொண்டு சென்று சேர்க்க வேண்டும்” என்றார்.