காவலர்களுக்கே பாதுகாப்பில்லை...மக்கள் எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும்? - டிடிவி தினகரன் கேள்வி
சென்னை வடபழனியில் பெண் போக்குவரத்து காவலர் மீது போதை ஆசாமி தாக்குதல் - காவலர்களுக்கே பாதுகாப்பில்லாத தமிழகத்தில் மக்கள் எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும் ? என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை வடபழனியில் பெண் வியாபாரி ஒருவரிடம் தகராறில் ஈடுபட்ட போதை ஆசாமியை தட்டிக் கேட்ட போது நடத்தப்பட்ட தாக்குதலில் பெண் போக்குவரத்து காவலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்தே பொதுமக்கள் தொடங்கி வியாபாரிகள், அரசு ஊழியர்கள், மருத்துவர்கள், காவலர்கள் என அனைத்து தரப்பினருக்குமே பாதுகாப்பில்லாத சூழல் நிலவுவதை தற்போது நடைபெற்றிருக்கும் இந்த சம்பவம் மீண்டும் ஒருமுறை உறுதிபடுத்தியுள்ளது.