×


 
இலங்கை கடற்படையின் அத்துமீறலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் - டிடிவி தினகரன் வலியுறுத்தல்

 

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 19 பேரை இலங்கை கடற்படையினர்  கைது செய்திருப்பது கண்டத்திற்குரியது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 3 ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 23 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில், நேற்று இரவு மேலும் 19 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.  தமிழக மீனவர்கள் ஒவ்வொருமுறை கைதுசெய்யப்படும் போதும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதை மட்டுமே  வாடிக்கையாக கொண்டிருக்கும் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழக மீனவர்களின் கைதை தடுத்து நிறுத்த ஆக்கப்பூர்வமாக மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன ?