காட்டுநாயக்கர் சமுதாய மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க மறுப்பதா ? - டிடிவி தினகரன் ஆவேசம்
Nov 15, 2024, 13:00 IST
சமுதாயத்தின் விளிம்பு நிலையில் இருக்கும் காட்டுநாயக்கர் சமுதாய மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க மறுப்பதா ? என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விளிம்பு நிலை மக்களின் கல்விக்கும் வேலைவாய்ப்பிற்கும், முன்னேற்றத்திற்கும் தடைபோடும் திமுக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது. மதுரை மாவட்டம் பரவை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசித்து வரும் காட்டுநாயக்கர் சமுதாயத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள், சாதி சான்றிதழ் வழங்கக் கோரி தங்கள் குழந்தைகளுடன் 8வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.