ராணுவ பயிற்சியில் தேனி மாவட்டத்தை சேர்ந்த வீரர் உயிரிழப்பு - டிடிவி தினகரன் இரங்கல்!
Nov 13, 2024, 09:40 IST
தேனி மாவட்டம் சங்ககோணம்பட்டியை சேர்ந்த ராணுவ வீரர் முத்து ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற ராணுவ பயிற்சியில் உயிரிழந்த நிலையில், அவரது மறைவுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாலர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மர் பகுதியில் ராணுவ பயிற்சியில் ஈடுபட்டிருந்த தேனி மாவட்டம் சங்ககோணம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் திரு.N.முத்து அவர்கள் மரணமடைந்தார் என்ற செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது.