×

கல்வி மட்டுமே ஒருவரின் வாழ்க்கையை உயர்த்தும் என்பதற்கு ஸ்ரீபதி எடுத்துக்காட்டு - டிடிவி தினகரன்

 

கல்வி மட்டுமே ஒருவரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் என்பதற்கு எடுத்துக்காட்டாக நீதிபதி தேர்வில் வெற்றி பெற்றிருக்கும் ஸ்ரீபதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 23 வயதில் உரிமையியல் நீதிபதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கும் திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலைப்பகுதியைச் சேர்ந்த திருமதி.ஸ்ரீபதி அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.