ஜனநாயகத்தின் 4வது தூணாக விளங்கும் பத்திரிக்கையாளர்களுக்கு வாழ்த்துக்கள் - டிடிவி தினகரன்!
Nov 16, 2024, 14:10 IST
பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களின் சுதந்திரத்தையும், பத்திரிகையாளர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 16ம் தேதி தேசிய பத்திரிக்கை தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. தேசிய பத்திரிக்கை தினத்தையொட்டி தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள பதிவில், ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் பத்திரிகை மற்றும் ஊடகங்களில் நேர்மையாக, சுதந்திரமாக, மற்றும் நடுநிலையாக பணியாற்றுவோரை போற்றும் விதமாக கொண்டாடப்படும் தேசிய பத்திரிகை தினம் இன்று.