எம்.ஜி.ஆர் 107வது பிறந்தநாள் - டிடிவி தினகரன் மரியாதை
புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் 107வது பிறந்தநாளான இன்று டிடிவி தினகரன் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.
இதுதொடர்பாக அமமுக சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாட்டு மக்களின் மனங்களில் நீக்கமற நிறைந்திருக்கும் ஏழைகளின் ஏந்தல், பொன்மனச்செம்மல், புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் 107வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள், கடலூர் மாவட்டம், மஞ்சக்குப்பம், மணிகுண்டு அருகே அமைந்துள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்கள்.
இதன் தொடர்ச்சியாக கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் சார்பில், சென்னை அண்ணாசாலையில் அமைந்துள்ள புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் திருவுருவச்சிலைக்கு கழக துணை பொதுச்செயலாளரும், தென்சென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு.G.செந்தமிழன், கழக கொள்கை பரப்பு செயலாளரும், முன்னாள் சமூக நல வாரிய தலைவருமான செல்வி C.R.சரஸ்வதி, கழக அமைப்பு செயலாளரும், கழக பொறியாளர் அணி செயலாளரும், செங்கல்பட்டு வடக்கு மாவட்ட கழக செயலாளருமான திரு.ம.கரிகாலன், கழக அமைப்பு செயலாளரும், மத்திய சென்னை மேற்கு மாவட்ட கழக செயலாளருமானதிரு.V.சுகுமார்பாபு, கழக மீனவர் அணி செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான திரு.T.ஆறுமுகம், கழக அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி
செயலாளர் திரு.குட்வில் குமார், திருவள்ளூர் மத்தியம் மாவட்டக் கழக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான திரு.S.வேதாசலம், மத்திய சென்னை கிழக்கு மாவட்டக் கழக செயலாளர் திரு.L.ராஜேந்திரன், வடசென்னைகிழக்கு மாவட்டக் கழக செயலாளர் திரு.C.P.ராமஜெயம், வடசென்னை மத்தியம் மாவட்டக் கழக செயலாளர் திரு.A.R.பழனி, மத்திய சென்னை மத்திய மாவட்டக் கழக செயலாளர் திரு.ஹாஜி K.முகமது சித்திக், தென்சென்னை வடக்கு மாவட்டக் கழக செயலாளர் திரு.K.விதுபாலன், கழக சிறுபான்மையினர் நலப்பிரிவு இணைச்செயலாளர் திரு.S.M.ஜோமணிபென், கழக அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி பொருளாளர் திரு.பி.ஆர்.சாமி (எ) P.முனுசாமி மற்றும் கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
இந்நிகழ்வில் மாவட்ட, பகுதி, ஒன்றியம், நகரம் மற்றும் பேரூர், வட்ட கழக நிர்வாகிகளும், அனைத்து சார்பு அணிகளின் நிர்வாகிகள் மற்றும் கழக தொண்டர்கள் என திரளானோர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மேலும், கழக அமைப்பு ரீதியாக செயல்படும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கழக நிர்வாகிகள் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் திருவுருவச்சிலைக்கும் மற்றும் அலங்கரித்து வைக்கப்பட்ட அன்னாரது திருவுருவப்படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.