×


புரட்சி நாயகர் சுபாஷ் சந்திரபோஸின் வீரத்தையும், தியாகத்தையும் போற்றி வணங்கிடுவோம் - டிடிவி தினகரன்

 

உயர்ந்த லட்சியத்தோடும், கொள்கை உறுதியோடும் இறுதிவரை பயணித்து சுதந்திர போராட்டத்தை வலுப்படுத்திய புரட்சி நாயகர் சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் வீரத்தையும் தியாகத்தையும் எந்நாளும் போற்றி வணங்கிடுவோம் என டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார். 

சுதந்திர போராட்ட வீரர் சுபாஷ் சந்திர போஸின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவரது பிறந்த நாளையொட்டி தலைவர்கள் பலரும் அவருக்கு புகழாரம் சூட்டி வருகின்றனர். இதேபோல் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அவரது புகைப்படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சுபாஷ் சந்திரபோஸின் நினைவு தினத்தையொட்டி அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். 


இது தொடர்பாக டிடிவி தினகரன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இந்திய தேசிய விடுதலையை தன் உயிர் மூச்சாகக் கொண்டு ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை துணிச்சலுடன் எதிர்கொண்ட வீரத் திருமகன் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் பிறந்த தினம் இன்று. உயர்ந்த லட்சியத்தோடும், கொள்கை உறுதியோடும் இறுதிவரை பயணித்து சுதந்திர போராட்டத்தை வலுப்படுத்திய புரட்சி நாயகர் சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் வீரத்தையும் தியாகத்தையும் எந்நாளும் போற்றி வணங்கிடுவோம் என குறிப்பிட்டுள்ளார்.