×

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் - டிடிவி தினகரன் வலியுறுத்தல்

 

மக்கள் அனைவருக்கும் பயன் தரும் சிந்தனைகளை கொண்ட உலகப் பொதுமறையான திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். 

ஜனவரி 16ம் தேதியான இன்று திருவள்ளூர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு தலைவர்கள் பலரும் அவருக்கு புகழாரம் சூட்டி வருகின்றனர். இந்த நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். 


இது தொடர்பாக டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள பதிவில்,  சாதி, மதம், மொழி, இனத்திற்கு அப்பாற்பட்டு அனைத்து சமுகத்தினருக்கும் பொருந்தக் கூடிய கருத்துக் கருவூலமான திருக்குறளை படைத்த திருவள்ளுவரின் தினம் இன்று. மக்கள் அனைவருக்கும் பயன் தரும் சிந்தனைகளை கொண்ட உலகப் பொதுமறையான திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்ற இதயதெய்வம் அம்மா அவர்களின் எண்ணத்தை நிறைவேற்ற இந்நாளில் உறுதியேற்போம் என குறிப்பிட்டுள்ளார்.