சீமானுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த தவெக தலைவர் விஜய்!
Nov 8, 2024, 11:28 IST
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு சமீபத்தில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் விஜய் கட்சியின் கொள்கை மற்றும் கோட்பாடுகளை அறிவித்தார். அதில் முக்கிய அறிவிப்பாக பார்க்கப்படுவது கூட்டணி நிலைபாடு. அதாவது தனது கட்சியுடன் வருகிற 2026ம் ஆண்டு கூட்டணி அமைக்கும் கட்சிகளுக்கு ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என அறிவித்தார். இதேபோல் திராவிடமும், தமிழ்தேசியமும் ஒன்றுதான் என அறிவித்தார். தவெக தலைவர் விஜயின் இந்த அறிவிப்புக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் கடந்த சில நாட்களாக தவெக தலைவர் விஜயை கடுமையாக விமர்சித்து வந்தார் சீமான்.