×

#TVKMaanaadu திராவிட மாடல் ஆட்சி என ஏமாற்றுகிறார்கள்: விஜய்
 

 

நடிகர் விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சி நிறுவப்பட்டு, அதன் முதல் மாநாடு விக்கிரவாண்டி அடுத்த வி.சாலை பகுதியில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்துகொண்டுள்ளனர். 

மாநாட்டில் உரையாற்றிய நடிகர் விஜய், “பிளவுவாதம், ஊழல் மலிந்த அரசியல்தான் தவெகவின் எதிரி. நம் கொள்கைகளை அறிவித்துவிட்டதால் கதறல் சத்தம் இனி அதிகமாக கேட்கும். சிறுபான்மை, பெரும்பான்மை என சீன் காண்பிக்கிறார்கள். திராவிட மாடல் ஆட்சி என ஏமாற்றுகிறார்கள். பெரியார், அண்ணா பெயரை சொல்லி கொள்ளையடிக்கும் ஒரு குடும்பம் தான் எங்களின் அரசியல் எதிரி. நமது அரசியல் போட்டி திமுக தான். கருத்தியல் பேசி கபட நாடகம் போடுவார்கள், அந்த கரெப்சன் கபடதாரிகள்தான் இப்போது நம்மை ஆண்டுக்கொண்டு இருக்கிறார்கள். ஊழல் செய்பவர்கள் கருத்தியல் பேசி கொள்கை நாடகம் போடுவார்கள். அதுக்கு முகமே இருக்காது. முகமூடிதான் முகமே! இப்படி முகமூடி போட்ட கரெப்சன் கபடதாரிகள்தான் இப்ப நம்ம கூடவே இருந்துகிட்டு இப்போ இங்க நம்ம ஆண்டுகொண்டும் இருக்கிறார்கள்..!


நீட் விவகாரத்தில் அனிதாவின் மரணம் பெரும் வேதனையை ஏற்படுத்தியது. வீடு, உணவு, வேலை இது மூன்றுமே அடிப்படை தேவைதான்.அனைவருக்கும், அனைத்தும் சமம் என்பதே அடிப்படை கொள்கை. ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரத்தை எதிர்ப்பதும் நமது கொள்கை அவர்களும் நம்முடைய எதிரிகள் பிளவுவாத சக்திகளும் நமக்கு பெரிய எதிரி. இவர்கள் மதம்பிடித்த யானை மாதிரி. நம்மள பாத்து யாரும் விசிலடிச்சான்குஞ்சுன்னு சொல்லிட கூடாது. செயல்தான் முக்கியம்” என்றார்.