×

#TVKMaanaadu தவெகவுடன் கூட்டணிக்கு வந்தால் அட்சி அதிகாரத்தில் பங்குண்டு- விஜய்
 

 

நடிகர் விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சி நிறுவப்பட்டு, அதன் முதல் மாநாடு விக்கிரவாண்டி அடுத்த வி.சாலை பகுதியில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்துகொண்டுள்ளனர். 

 

மாநாட்டில் உரையாற்றிய தவெக தலைவர் விஜய், “கட்சி ஆரம்பித்ததால் என்னை கூத்தாடி என விமர்சிப்பார்கள். திராவிட இயக்கம் வளர்ந்ததே சினிமா என்ற கூத்தாடிகளால்தான். உழைத்து உழைத்து மேலே வந்தவன் தான் இந்த கூத்தாடி. என்னிடம் இருப்பது உண்மை, நேர்மை, உழைப்பு. சினிமா வாழ்க்கை உச்சத்தில் இருந்தபோதும், உங்கள் விஜய்யாக உங்களை மட்டுமே நம்பி வந்துள்ளேன். என் மீது நம்பிக்கை வைத்து நீங்கள் என்னை இந்த இடத்திற்கு கொண்டு வந்துள்ளீர்கள். 

இது ஒரு அரசியல் அணுகுண்டு.  மக்களோடு மக்களாய் களத்தில் நிற்க போகிறோம். தவெகவுடன் கூட்டணிக்கு வந்தால் அட்சி அதிகாரத்தில் பங்குண்டு... பெண்கள், குழந்தைகள், முதியவர்களின் பாதுகாப்பிற்கு தனித்துறை உருவாக்க வேண்டும். 2026 ஆம் ஆண்டு ஒரு புதிய அரசியல் களத்தில் புத்தாண்டு. யார் பெயரையும் இந்த விஜய் நேரடியாக சொல்லாம இருக்கானே என்று நினைப்பீர்கள்... அதற்கு காரணம் பயம் அல்ல. அரசியல் நாகரீகம். யாரையும் தாக்குவதற்கு இங்குவரவில்லை.  தவெக தொண்டர்களின் கடுமையான உழைப்பை நம்பி மக்கள் தனிப்பெரும்பான்மை வழங்குவார்கள். யாரையும் தரக்குறைவாக, தகாத வார்த்தைகள் பேச நாங்கள் வரவில்லை.Decent அரசியல் செய்ய வந்துள்ளோம்.” என்றார்.