×

‘மாவீரம் போற்றுதும்..மாவீரம் போற்றுதும்’- விஜய் 

 

தமிழர்களுக்கென ஒரு தனி நாடாக தமிழீழம் அமைக்கும் முயற்சியில்   இன்னுயிர் ஈந்த ஈழப்போராளிகளின் தியாகத்தை போற்றும் வகையில் நவம்பர் 27-ஆம் நாள் மாவீரர் நாளாக கடைபிடிக்கப்படுகிறது.

தமிழீழ விடுதலைக்கான போரில் உயிர் நீத்த வீரர்களின் நினைவைப் போற்றும் மாவீரர் நாளான இன்று ‘மாவீரம் போற்றுதும்..மாவீரம் போற்றுதும்’ என தவெக தலைவர் விஜய் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.