#TVKMaanaadu தவெக கொள்கை பாடலில் பெரியார்!
Oct 27, 2024, 17:08 IST
5 தலைவர்களின் பெயர்கள் தவெக கொள்கை பாடலில் பெரியார், அம்பேத்கர், காமராஜர், வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
“மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கை- Secular Social Justice Ideology” என்ற தலைப்புடன் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பாடல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பாடலில் தந்தை பெரியார் விஜய்க்கு வழிகாட்டி அழைத்துச் செல்வது போன்ற காட்சிகள் வைக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து பெரியாரை முன்னிறுத்தி தமிழக வெற்றி கழகம் தனது அரசியல் செயல்பாடுகளை முன்னெடுக்க உள்ளது என்பது தெளிவுபடுத்துகிறது.