#TVKMaanaadu பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கையில் உடன்பாடு இல்லை - விஜய்
நடிகர் விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சி நிறுவப்பட்டு, அதன் முதல் மாநாடு விக்கிரவாண்டி அடுத்த வி.சாலை பகுதியில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
தவெக மாநாட்டில் உரையாற்றிய அக்கட்சி தலைவர் விஜய், “வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவிற்கு சிலிர்ப்பில் உள்ளேன். அரசியலுக்கு நான் குழந்தைதான். பாம்பாக இருந்தாலும் பயமில்லை. பாம்பு தான் அரசியல்; பாம்பாக இருந்தாலும் பயமில்லை என்பதுதான் நம்முடைய நம்பிக்கை. இன்றைய அரசியலில் நான் கவனமுடன் தான் செயல்பட வேண்டும். மேடையில் இருப்பவரும் சரி, கீழே இருப்பவரும் சரி. அனைவரும் ஒன்றுதான். அறிவியல் மட்டுமல்ல அரசியலும் மாற வேண்டும். பெரியார் எங்கள் கொள்கை தலைவர். பெரியார் எடுத்த கடவுள் மறுப்பு கொள்கையில் எங்களின் உடன்பாடு இல்லை. ஊழல் நம் கண்ணுக்கு தெரியாத மிகப் பெரிய எதிரி.
இதற்கு முன்பு நாம் சந்தித்தது ஆடியோ லாஞ்ச்சில். தற்போது சந்தித்திருப்பது அதிரடி லாஞ்ச்சில். யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் நாங்கள் எதிரானவர்கள் இல்லை. ஒன்றே குலம் ஒருவனே தேவன் எனும் அண்ணாவின் கொள்கைதான் எங்கள் கொள்கைகளும். பாகுபாடு இல்லாத சமத்துவ சமுதாயத்தை உண்டாக்க.. உங்களுக்காக நான் வரேன்” என்றார்.