#TVKMaanaadu அரசியல் கட்சி தொடங்கியது ஏன்?- விஜய் விளக்கம்
Updated: Oct 27, 2024, 18:41 IST
நடிகர் விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சி நிறுவப்பட்டு, அதன் முதல் மாநாடு விக்கிரவாண்டி அடுத்த வி.சாலை பகுதியில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
மாநாட்டில் உரையாற்றிய தவெக தலைவர் விஜய், “நமக்கு இவ்வளவு கொடுத்த என்ன செய்யப்போகிறோம் என்று யோசித்தபோதுதான் அரசியல் என்ற விடை கிடைத்தது. எதைப் பற்றியும் யோசிக்காமல் இறங்கி அடித்தால் மட்டுமே மக்களுக்கு நல்லது செய்ய முடியும் என தோன்றியது. அரசியலில் நாம் என்ன நிலைப்பாடு எடுக்கப்போகிறோம் என்பதுதான் முக்கியம். சரியான நிலைப்பாடு எடுத்துவிட்டால் நமது எதிரி யார் என சொல்லத் தேவையில்ல. அவர்களே நம் முன் வந்து நிற்பார்கள். பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும் என அறிவித்தபோதே நமது நிலைப்பாடு என்ன என்பதை அறிவித்துவிட்டோம்” என்றார்.