×

சேலம் மாநாட்டில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பிய திமுக நிர்வாகி சாலை விபத்தில் பலி - உதயநிதி இரங்கல்

 

திமுக மாநாட்டில் பங்கேற்று விட்டு வீடு திரும்பிய போது சாலை விபத்தில் உயிரிழந்த திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தை சேர்ந்த திமுக உறுப்பினர் சதீஷ்குமார் குடும்பத்திற்கு அமைச்சர் 

சேலத்தில் நடைபெற்ற திமுகவின் இளைஞரணி இரண்டாவது மாநில மாநாட்டில் பங்கேற்று விட்டு வீடு திரும்பிய திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தை சேர்ந்த சதீஷ்குமார் சாலை விபத்தில் உயிரிழந்தார். இந்த நிலையில், அவரது மறைவிற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,  திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியைச் சேர்ந்த கழக உறுப்பினர் தம்பி சதீஷ்குமார், சேலத்தில் நடைபெற்ற கழக இளைஞரணி மாநாட்டில் பங்கேற்றுவிட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்த போது, சங்ககிரி அருகேயுள்ள வைகுந்தம் சுங்கச்சாவடி பகுதியில் சாலை விபத்தில் உயிரிழந்ததை அறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தோம்.