×

நீட் விலக்கு தர பிரதமரிடம் வலியுறுத்தினேன்- உதயநிதி ஸ்டாலின்

 

டெல்லி  வரும்போது தன்னை சந்திக்கும்படி பிரதமர் மோடி கூறியிருந்தார், அதன்படி இன்று அவரை சந்தித்தேன் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பு மிகவும் திருப்தியாக அமைந்தது. பிரதமர் கடந்தமுறை சென்னை வந்தபோது, டெல்லி வந்தால் தன்னை சந்திக்குமாறு சொல்லியிருந்தார். அதனால் கேட்டு பிரதமர் மோடியை சந்தித்தேன். நேரம் கேட்டு பிரதமர் மோடியை சந்தித்தேன். அதனால் நேரம் பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கும் இரங்கல் தெரிவித்தேன். 

நீட் விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் சட்டப்போராட்டம் தொடரும் என பிரதமர் மோடியிடம் தெரிவித்தேன். நீட் விவகாரத்தில் தமிழ்நாட்டு மக்களின் மனநிலையை பிரதமர் மோடியிடம் எடுத்துரைத்தேன். நீட் விலக்கு கேட்டபோது பிரதமர் மோடி சில விளக்கங்களை அளித்தார். அரசின் சட்டப்போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்தேன். கேலோ இந்தியா போட்டியை தமிழ்நாட்டில் நடத்த வாய்ப்பை தருமாறு பிரதமரை கேட்டுக் கொண்டேன். 

தமிழ்நாட்டில் தொகுதிவாரியாக விளையாட்டு மைதானம் அமைக்க இருப்பதை பிரதமரிடம் எடுத்துக் கூறினேன். மாவட்டந்தோறும் விளையாட்டு மைதானம் அமைக்க நிதி ஒதுக்குமாறு பிரதமரிடம் கோரிக்கை விடுத்தேன். விளையாட்டரங்கு பராமரிப்பு திட்டம் பற்றி கேள்வி எழுப்பிய பிரதமர், அவர் முதலமைச்சராக இருந்தபோது பெற்ற அனுபவங்களை பகிர்ந்தார்.” எனக் கூறினார்.