ஒன்றிணைந்து செயல்படுவோம்...மதவெறிக்கு முற்றுப்புள்ளி வைப்போம் - உதயநிதி ஸ்டாலின்!
Jan 30, 2024, 12:35 IST
காந்தியடிகளைச் சுட்டுக் கொன்ற மதவெறி, இன்று நாட்டின் மத நல்லிணக்கத்தை நோக்கி தனது துப்பாக்கியை நீட்டுகிறது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
அண்ணல் காந்தியடிகளின் நினைவு நாளான இன்று, கழகத்தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி, மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றபோது, சக அமைச்சர் பெருமக்கள் - கழக மூத்த நிர்வாகிகளுடன் பங்கேற்று மத நல்லிணக்க உறுதிமொழியை எடுத்துக் கொண்டோம்.