×

விஜய்யின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்- உதயநிதி ஸ்டாலின்

 

பல கட்சிகள் வந்து இருக்கிறது, காணாமலும் போகி இருக்கிறது, இதில் மக்கள் பணி தான் முக்கியம் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார். 

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை அறிவாலயதில் உள்ள கலைஞர் அரங்கில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தவெக மாநாடு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், “நடிகர் விஜய் சிறிய வயதில் இருந்தே எனக்கு தெரியும். விஜய் நீண்ட கால நண்பர் அவரது புதிய முயற்சிக்கு என் வாழ்த்துக்கள். நான் தயாரித்த முதல் படம் அவருடையது தான். எந்த கட்சியின் வரக்கூடாது என்று சட்டம் இல்லை. கட்சி தொடங்க அனைவருக்கும் உரிமை உண்டு. 

மக்கள் பணி தான் முக்கியம் மக்கள் யாரை ஏற்றுக் கொள்கிறார்கள் என்பது தான் முக்கியம் கொள்கைகள் முக்கியம். மக்கள் பணியில் எப்படி ஈடுபடப் போகிறார்கள் என்பதுதான் முக்கியம். பல கட்சிகள் வந்து இருக்கிறது. காணாமலும் போகி இருக்கிறது. இதில் மக்கள் பணி தான் முக்கியம்” என்றார்.