×

ஒலிம்பிக் போட்டி- ஊக்கத்தொகை ரூ.7 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்: உதயநிதி ஸ்டாலின்   

 

விளையாட்டு துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “நான் முதல்வன் திட்டத்தின் திறன் சார்ந்த படிப்புகள், 45 ஆயிரம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் துணை மருத்துவ படிப்புகளும் விரிவுபடுத்தப்படும். கடந்த முறை ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற தமிழ்நாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக ரூ.5 லட்சம் வழங்கப்பட்டது. இம்முறை ரூ.7 லட்சமாக உயர்த்திவழங்கப்படும்.

கேலோ இந்தியா போட்டிக்காக கடந்தமுறை மத்தியப் பிரதேசத்திற்கு மத்திய அரசு ரூ.25கோடி கொடுத்தது. ஆனால் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிக்காக தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு கொடுத்தது ரூ.10 கோடிதான். ரூ - 4000 கோடி  வட சென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டு  மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னை, காஞ்சிபுரம், கோவை மாவட்டங்களில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய விளையாட்டு விடுதிகள் அமைக்கப்படும். திமுக ஆட்சிக்கு வந்த பின் விளையாட்டு வீரர்களுக்கு ரூ.102 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. 

அனைத்து சட்ட்ன்ற தொகுதிகளிலும் மின ஸ்டேடியம் அமைப்பதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆய்வு செய்யப்படும். கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கான பணிகள் விரைவுப்படுத்தப்படும். உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின்கீழ் 210 திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. ராயபுரம், கொடுங்கையூரில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும். கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கான பணிகள் இந்தாண்டு தொடங்கப்படும். ஓட்டப்பந்தயத்தில் உசைன் போல்ட், கிரிக்கெட் என்றால் தோனி, அதுபோல அரசியல் துறையில் நம்முடைய முதல்வர் ஸ்டாலின் சாதனைகளைக் குவித்து வருகிறார்.” என்றார்.