“மதவாத, பிளவுவாத அரசியலை எதிர்த்து வரும் கமல் சாரின் பணிகள் சிறக்கட்டும்”- உதயநிதி
Updated: Nov 7, 2024, 09:02 IST
மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசனுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் கலைஞானி என போற்றப்பட்ட திரையுலகின் பேராளுமை. கழகத்தலைவர் அவர்களின் அன்பு நண்பராக – கழகத்தோடு கரம் கோத்து ஓரணியாய் மக்களுக்கான அரசியலை முன்னெடுக்கும் முற்போக்கு முகம்.
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் உலகநாயகன் கமல்ஹாசன் சாருக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மதவாத - பிளவுவாத அரசியலை சரியான தளத்தில் நின்று எதிர்த்து வரும் கமல் சாரின் பணிகள் மென்மேலும் சிறக்கட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.