×

இசைப் பிரியர்களின் இதயக்கதவுகளை திறந்த உமா ரமணன் மறைவு பேரிழப்பு - அமைச்சர் தங்கம் தென்னரசு இரங்கல் 

 

பிரபல பின்னணி  பாடகி உமா ரமணன் நேற்று உயிரிழந்தார். அவருக்கு வயது 69. பின்னணி  பாடகியான உமா ரமணன் சென்னை அடையார் காந்தி நகரில் உள்ள இல்லத்தில் கணவருடன் வசித்து வந்த நிலையில் அவருக்கு உடல் நலக் கோளாறு ஏற்பட்டது. கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 


பாடகி உமா ரமணன் தமிழ்,  இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் தனது இனிய குரலால் பல பாடல்களை பாடி ரசிகர்களின் மனம் கவர்ந்துள்ளார். நிழல்கள் திரைப்படத்தில் பூங்கதவே தாழ் திறவாய் பாடல்கள் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர்,  பன்னீர் புஷ்பங்கள் மூடுபனி கர்ஜனை உள்ளிட்ட ஏராளமான இளையராஜாவின்  பாடல்களை பாடியுள்ளார்.   இளையராஜா மட்டுமின்றி எம்.எஸ். விஸ்வநாதன், சங்கர் கணேஷ், டி. ராஜேந்தர், தேவா ,சிற்பி, வித்யாசாகர் ,மணி ஷர்மா உள்ளிட்ட ஏராளமான இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியுள்ளார்.  ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மேடை கச்சேரிகளில் பங்கேற்றுள்ளார் .ரமணனின் மறைவு அவரது ரசிகர்கள் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.