×

தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த விமானங்கள்! மதுரையில் பரபரப்பு

 

மதுரை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த விமானங்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

கனமழையால் மதுரை விமான நிலையத்தில் 2 விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்தன. சென்னை மற்றும் பெங்களூருவில் இருந்து மதுரை வந்த 2 இண்டிகோ விமானங்கள் சுமார் ஒரு மணி நேரமாக வானில் வட்டமடித்தன. இரு விமானங்களையும் திருச்சி மற்றும் தூத்துக்குடி விமான நிலையங்களில் தரையிறக்க அதிகாரிகள் திட்டமிட்டனர். 

இதனிடையே மோசமான வானிலை காரணமாக மதுரை விமான நிலையத்தில் தரையிறக்க முடியாமல் வெகு நேரமாக வானில் வட்டமிட்டுக் கொண்டிருந்த 2 விமானங்களையும் மதுரையிலேயே பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டதால் பயணிகள் நிம்மதி அடைந்தனர்....