#Justin கர்நாடகாவை சேர்ந்த மத்திய அமைச்சர் ஷோபா மன்னிப்பு கோரினார்!
Updated: Mar 20, 2024, 00:24 IST
‘ராமேஸ்வரம் கஃபே’ குண்டுவெடிப்பு வழக்கில் தமிழர்களை தொடர்புபடுத்தி தான் தெரிவித்த கருத்துகளுக்காக கர்நாடகாவைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் ஷோபா மன்னிப்பு கோரினார்.
அவர் கூறிய கருத்துக்களுக்கு தமிழகத்திலிருந்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வந்தனர்.
இதனிடையே தான் கூறிய கருத்துகளுக்கு மன்னிப்புக் கோருவதாக மத்திய அமைச்சர் ஷோபா தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.