×

கவரிமான் கொண்டையணிந்து காட்சியளித்த நம்பெருமான்! – வைகுண்ட ஏகாதசி 5 ஆம் நாள் விழா !

மார்கழி மாதத்தில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி விழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. மார்கழி மாதம் முழுவதும் நம்பெருமான் பல திருவாபரணங்களில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசியின் 5 ஆம் நாள் விழாவில், நம்பெருமாள் கவரிமான் தொப்பாரக்கொண்டை, விமானப் பதக்கம் அணிந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். 108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையாக கருதப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயில், பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுகிறது. இங்கு வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்கவாசல் திறப்புவிழா
 

மார்கழி மாதத்தில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி விழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. மார்கழி மாதம் முழுவதும் நம்பெருமான் பல திருவாபரணங்களில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசியின் 5 ஆம் நாள் விழாவில், நம்பெருமாள் கவரிமான் தொப்பாரக்கொண்டை, விமானப் பதக்கம் அணிந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையாக கருதப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயில், பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுகிறது. இங்கு வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்கவாசல் திறப்புவிழா மிகவும் சிறப்புவாய்ந்ததாகும்.

கடந்த 15 ஆம்தேதியன்று தொடங்கிய வைகுண்ட ஏகாதசி விழா கொண்டாட்டம், பகல்பத்து நாட்கள், இரவு பத்து என 21நாட்கள் நடைபெறும். இந்த நிகழ்வுகளில் பல்வேறு அலங்காரத்தில் நம்பெருமான் எழுந்தருவாள்ர். வீதி உலாவில் ஆயிரக்கணக்கான கலந்துகொண்டு வழிபாடு செய்வர்.

வைகுண்ட ஏகாதசி விழாவின் பகல்பத்து விழாவின், 5ஆம் நாளான இன்று, சுக்கிரனுக்கு அதிபதியான நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து கவரிமான் தொப்பாரக் கொண்டையணிந்து, மார்பில் விமானப்பதக்கம், மற்றும் வைர அபயஹஸ்தம், முத்துமாலை, பவளமாலை சாற்றிக்கொண்டு மூலஸ்தானத்திலிருந்து எழுந்தருளினார்.

பின்னர் ராமானுஜர், திருமங்கையாழ்வார், பெரியாழ்வார் தொடர்ந்துவர வழியெங்கும் திருமொழி பாசுரங்கள் பாடப்பட்டன. பின்னர் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அர்ச்சுன மண்டபத்தில் பெருந்திரளான மக்கள் வரிசையில் நின்று ரெங்கநாதனரை தரிசித்துச் சென்றனர்.