×

வைகுண்ட ஏகாதசி- ஸ்ரீரங்கத்தில் ரயில்கள் நின்று செல்லும்

 

திருச்சி ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் நாளையும், நாளை மறுநாளும் 2 விரைவு ரயில்கள் நின்று செல்லும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

தமிழ் மாதத்தில் மார்கழி மிகவும் விசேஷமான ஆன்மீக மாதமாகும். இந்த மார்கழி மாதத்திற்கு இன்னொரு பெயர் தருமாதம் என்று அழைக்கப்படும். இந்த மாதத்தில் வளிமண்டலங்களில் ஓசன் மண்டபங்களில் தொலைவில் ஏற்பட்டு அதன் மூலம் பூமிக்கு சுத்தமான ஆக்சிஜன் அதிகாலையில் உருவாகும் இந்த சுத்தமான ஆக்சனை நாம் அனைவரும் சுவாசித்தால் உடல் ஆரோக்கியமும் நலமுடன் வாழ்வோம் என நமது முன்னோர்கள் தெரிவித்துள்ளனர். மார்கழி மாதம் பெருமாளை தரிசனம் செய்வதன் மூலம் குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம், ராகு கேது பெயர்ச்சி தொழில் வளர்ச்சி நடைபெறும் என்பது ஐதீகம். வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறப்பு நடைபெறும். 

இந்த ஆண்டு திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் வைகுண்ட ஏகாதசி திருவிழா வரும் (23.12.2023) சனிக்கிழமை  நடைபெறவுள்ளது. இதையடுத்து வைகுண்ட ஏகாதசி விழாவுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக சென்னை - கன்னியாகுமரி விரைவு ரயிலும், சென்னை - கொல்லம் விரைவு ரயிலும் ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் நாளையும், நாளை மறுநாளும் நின்று செல்லும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.